திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பகத்சிங், பொருளாளர் காளீஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு கொள்கையை வெளியிட வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Next Story