கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கு எதிர்ப்புதெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கு எதிர்ப்புதெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2021 5:19 PM GMT (Updated: 26 Oct 2021 5:19 PM GMT)

கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கு எதிர்ப்புதெரிவித்து நேற்று இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர்

வேலூர்

கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கு எதிர்ப்புதெரிவித்து நேற்று இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநகர ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன் முன்னிலை வகித்தார். கோட்ட பொருளாளர் பாஸ்கரன் கோரிக்கை குறித்து பேசினார். 

இதில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் பஸ்நிலையம் எதிரில்
கே.வி.குப்பம்  ஒன்றிய இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் கே.சங்கர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் டீக்காராமன், லோகநாதன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அ.பிரவீன்குமார் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். 
கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யவதைத் தடுக்க வேண்டும், கோயில் நகைகளின் உண்மையான இருப்பை ஆவணப்படுத்த வேண்டும், சாமி நகைகளில் உள்ள வைரம், வைடூரியம், பவளம் போன்ற உயர் ரக கற்களை பாதுகாக்க வேண்டும். இந்து கோவில்களை அரசாங்கத்தின் பிடியில் இருந்து மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

காட்பாடி

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் கோட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார். உருக்காதே உருக்காதே கடவுளுக்கு சொந்தமான நகைகளை உருக்காதே என கண்டனக்குரல் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம்

குடியாத்தத்தில் நகர ஒன்றிய இந்து முன்னணி சார்பில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ரவி, நகர துணைத் தலைவர்கள் கார்த்தி, யோகா, நகர செயலாளர்கள் பலராமன், ஜெயேந்திரன், ஹரிஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வேலூர் கோட்ட தலைவர் கோ.மகேஷ் சிறப்புரை ஆற்றினார்.

பக்தர்கள் அளித்த காணிக்கை நகைகளை உருக்குவது பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயலாகும். தமிழக அரசு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story