விழுப்புரத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
விழுப்புரத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள பானாம்பட்டு கிராமத்தில் ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பானாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் அருள்முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் பெங்களூருவில் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை (பான்மசாலா) கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விழுப்புரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அருள்முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 6750 பான்மசாலா பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story