இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
பரங்கிப்பேட்டை, முட்லூர் பகுதி இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
புவனகிரி,
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கைலாஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை முட்லூர், பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள இனிப்பு மற்றும் பெட்டிக்கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இனிப்பு கடைகளில் தீபாவளி பண்டிகையை யொட்டி தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளில் விதிமுறைகளை மீறி ரசாயனம் கலந்த கலர் பொடி கலக்கப்படுகிறா?, சுகாதாரமற்ற எண்ணெய் பயன்படுத்தபடுகிறதா? என்று ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த கடை உரிமையாளர்களிடம், பலகாரம் செய்யும் இடங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும், வாடிக்கையாளர்களுக்கு இனிப்பு விற்பனை செய்யும் போது, கண்டிப்பாக கையுறை அணிந்து இருக்க வேண்டும். இதை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இந்த ஆய்வின்போது வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நல்லதம்பி, குறிஞ்சிப்பாடி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story