சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு


சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு
x
தினத்தந்தி 26 Oct 2021 11:08 PM IST (Updated: 26 Oct 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரின் உடல் தோண்டி எடுப்பு

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த அவினாசி கண்டிகையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருண் (வயது 32). கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள பச்சையம்மன் கோவில் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததார். மது போதையில் கீழே விழுந்து இறந்து இருப்பார் என எண்ணி குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அருண் சாவில் சந்தேகம் அடைந்த அவரது தந்தை கோவிந்தராஜ் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். 

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து புதைக்கப்பட்ட அருண் உடலை நேற்று அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ் ஆகியோர் முன்னிலையில் தோன்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story