பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது


பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2021 11:19 PM IST (Updated: 26 Oct 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு அருகே பெண்ணை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தென்கரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 25), டிராக்டர் டிரைவர்.

இவருக்கும், திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 

அப்போது ராமன், அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமானார். 

இதையடுத்து ராமன், பெண்ணிற்கு மாத்திரை வங்கி கொடுத்த கருவை கலைத்ததாகவும், மேலும் ராமன் தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. 

இதபற்றி தகவலறிந்த அந்த பெண், ராமனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. 

இதுகுறித்து அந்த பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர்.

Next Story