திருவண்ணாமலையில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலையில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2021 5:50 PM GMT (Updated: 26 Oct 2021 5:50 PM GMT)

திருவண்ணாமலையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வம், பொருளாளர் சத்யா, துணைத்தலைவர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். 

மாநில துணைத்தலைவர் சண்முகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசாணை, 20-க்கும் குறையாமல் பணியாளர் உள்ள அரசு, தனியார் நிறுவனங்கள் சமவாய்ப்பு வழங்கும் வகையில் கொள்கையை வெளியிட்டு மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையரிடம் பதிவு செய்யவும், ஆவணங்கள் பராமரிக்கவும் வலியுறுத்துகிறது. 

இதனை அக்டோபர் 7-ந் தேதிக்குள் நிறைவேற்ற மாநில ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் பல மாவட்டங்கள் இதனை அமல்படுத்தவில்லை. 

இதனை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து அவர்கள் வேலை வாய்ப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

இதில் மாற்றுத் திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story