வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம்


வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2021 11:20 PM IST (Updated: 26 Oct 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசியில் குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி

வந்தவாசியில் குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பைகள் அகற்றப்படவில்லை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் 3, 6, 11 மற்றும் 24-வது வார்டுகளில் குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை என கூறப்படுகிறது. எனவே, இந்த வார்டுகளில் பல நாட்களாக குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதனால் குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து அந்தப் பகுதி பொதுமக்கள் தாங்கள் சேகரித்த குப்பைகளுடன் நேற்று வந்தவாசி நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

அலுவலகத்தில் குப்பை கொட்டினர் 

அங்கு நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி ஆணையாளர் ராமஜெயம், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் பாண்டி ஆகியோர் முன்னிலையில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில், குப்பைகள் அகற்றப்படும் என உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டியவுடன் துர்நாற்றம் வீசியதால் பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேறிவிட்டனர்.

Next Story