ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2021 11:21 PM IST (Updated: 26 Oct 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆம்பூர்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரும் கரும்புகளை அரவை செய்து கொண்டிருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் கொண்டுவரும் கரும்புகளை வேறு பகுதியில் உள்ள கூட்டுறவு ஆலைகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டது. தற்போது வரை ஆலை மூடப்பட்டு செயல்படாமல் உள்ளது. எனவே கரும்பு அரவையை தொடங்கிட வலியுறுத்தி தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம்சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரவையை தொடங்க வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு கரும்பு அரவையை தொடங்கிட நடவடிக்கை எடுத்து ஆலையை புனரமைக்க ரூ.10 கோடி நிதியுதவி வழங்கிடவும், வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு தொகையினை தீபாவளி பண்டிகைக்காக வழங்கிட வேண்டும் என தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் கேட்டுக்கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அருள் சீனிவாசன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story