பூக்கள் விலை சரிவு


பூக்கள் விலை சரிவு
x
தினத்தந்தி 27 Oct 2021 12:04 AM IST (Updated: 27 Oct 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

சுப முகூர்த்த தினம் ஏதும் இல்லாததால் பூக்கள் விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ சம்பங்கி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டது.

திருப்பூர்
சுப முகூர்த்த  தினம் ஏதும் இல்லாததால் பூக்கள் விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ சம்பங்கி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பூக்கள் குப்பையில் கொட்டப்பட்டது. 
பூக்கள் விலை சரிவு 
திருப்பூர் மார்க்கெட்டில் பூக்கள் மற்றும் காய்கறிகளை வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இவை வெளி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படுகின்றன.
பண்டிகைகள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் பூக்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை அதிகமாக இருக்கும். இதனை வாங்க பொதுமக்கள் கூட்டமும் அலைமோதும். இந்த நிலையில் தற்போது பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் எதுவும் இல்லை என்பதால் பூக்கள் விலையும் சரிவை சந்தித்துள்ளன.
குப்பையில் கொட்டும் வியாபாரிகள் 
அதன்படி நேற்று காட்டன் மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.320-க்கும், முல்லை ரூ.200-க்கும், ஜாதிமல்லி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.20-க்கும் என பூக்கள் விற்பனை செய்யப்பட்டன. 
இதில் சம்பங்கி சத்தியமங்கலத்தில் இருந்து 3 டன்கள் கொண்டுவரப்பட்டது. இதுபோல் செவ்வந்தி தர்மபுரியில் இருந்து 4 டன்கள் கொண்டுவரப்பட்டன. பூக்களின் வரத்து அதிகமாக இருந்ததால் விலையும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பலர் விற்பனையாகாத பூக்களை குப்பைகளில் கொட்டி செல்கிறார்கள்.  
--------

Next Story