வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார்.
இதில் தலைவர் சம்பத்குமார், துணை தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரெங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
பதவி உயர்வு பட்டியலை அங்கீகரிக்க வேண்டும்
தோட்டக்கலைத்துறை, மாவட்ட துணை இயக்குனர் அலுவலகங்களில் இதுவரை 17 மாவட்டங்களுக்கு மட்டுமே ஆட்சி அலுவலர் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும், தலா ஒரு ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்க வேண்டும். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு இளநிலை உதவியாளர், ஒரு தட்டச்சர் பணியிடத்தை உடனே அனுமதிக்க வேண்டும்.
2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதிய ஆட்சி அலுவலர் பதவி உயர்வு பட்டியலை உடனே அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story