நொய்யல் ஆற்றின் கரையோரம் இறைச்சிகழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு
மங்கலத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரம் இறைச்சிகழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மங்கலம்
மங்கலத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரம் இறைச்சிகழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இறைச்சி கழிவுகள்
மங்கலம் நால்ரோடு பகுதியானது திருப்பூர், பல்லடம், அவினாசி, சோமனூர் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் மையப்பகுதியாக உள்ளது. இப்பகுதியில் வணிகவளாகங்கள், ஆடு, மாடு, மீன், கோழி உள்ளிட்ட இறைச்சிக்கடைகள் அதிகளவில் உள்ளது. மேலும் இதன் அருகே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த நிலையில் மங்கலம் அருகே அவினாசி செல்லும் ரோட்டில் உள்ள நொய்யல் பாலத்தின் கீழும், நொய்யல் ஆற்றின் கரையோரத்திலும் இரவு நேரங்களில் அழுகிய காய்கறி கழிவுகள் மற்றும் இறைச்சிக்கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டிச் செல்கின்றனர்.
மேலும் அங்கு இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் நாய்கள் அதிகளவில் உள்ளது. நாய்கள் சாலையின் குறுக்கே, அங்கும் இங்கும் ஓடுவதால் விபத்து ஏற்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.
போராட்டம்
இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறும்போது “நொய்யல்கரையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்றார்.
மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி கூறும்போது “ மங்கலத்தில் இறைச்சிக்கழிவுகள், கொட்டுவதற்கு தனிஇடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இறைச்சிக்கழிவுகளை கொட்ட வேண்டும். இங்கு கொட்டப்பட்டுள்ள இறைச்சிக்கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகள் உடனடியாக அகற்றப்படும்.மேலும் நொய்யல் பாலம் அருகே காய்கறி கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்படும்” என்றார்.
-------
மங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்து அவினாசி செல்லும் ரோட்டில் நொய்யல்பாலம் அருகே கொட்டப்பட்டுள்ள காய்கறி, இறைச்சிக்கழிவுகளை படத்தில் காணலாம்.
---
மங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்து அவினாசி செல்லும் ரோட்டில் நொய்யல்பாலம் அருகே கொட்டப்பட்டுள்ள காய்கறி, இறைச்சிக்கழிவுகளை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story