பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி


பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 27 Oct 2021 12:13 AM IST (Updated: 27 Oct 2021 12:13 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் வாவிபாளையத்தில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனுப்பர்பாளையம்
திருப்பூர் வாவிபாளையத்தில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முட்டை
கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவு அமைப்பாளர் மூலம் வீடுகளுக்கு சென்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நேற்று சத்துணவு அமைப்பாளர் வீடுகளுக்கு சென்று முட்டை வழங்கியுள்ளார். அப்போது ஒரு சில குழந்தைகளுக்கு வழங்கிய முட்டைகள் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதைக்கண்ட பெற்றோர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில பெற்றோர் அதை திருப்பி பள்ளிக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். 
இதுதொடர்பாக விசாரித்தபோது கடந்த 20-ம் தேதி பள்ளிக்கு வந்த முட்டையை காலதாமதமாக நேற்று வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த முட்டைகளில் பெரும்பாலானவை அழுகி இருந்ததால் அவை அனைத்தும் அருகில் உள்ள குப்பை தொட்டியில் அட்டையுடன் தூக்கி வீசி எரிய பட்டிருந்தது தெரியவந்தது.
நடவடிக்கை
 இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சிகாமணி திருப்பூர் மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அனைத்தும் அழுகிய நிலையில் புழுக்கள் பிடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். எனவே இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து குழந்தைகளுக்கு உரிய காலத்தில் சத்துணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story