மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் அரசு, தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு பற்றிய கொள்கையை மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின்படி அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Related Tags :
Next Story