இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைெபற்றது.
சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரசின் விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். அதேபோல சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story