சிவகாசி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணிகளுக்காக சிவகாசியில் இன்றும், சாத்தூரில் நாளையும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சிவகாசி,
பராமரிப்பு பணிகளுக்காக சிவகாசியில் இன்றும், சாத்தூரில் நாளையும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி
மின்சார வாரியத்தின் சிவகாசி பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணைமின் நிலையத்தில் அக்டோபர் மாத பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் அனுப்பன்குளம், சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னகாமன்பட்டி, நாரணாபுரம், செல்லிநாயக்கன்பட்டி, ஆலமரத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் மின் சாரம் நிறுத்தப்படும்.
நாளை மின்தடை
அதேபோல் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சாத்தூர் துணை மின் நிலையத்தில் மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் சாத்தூர், படந்தால், வெங்க டாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீர்பாளையம், ஆகிய பகுதியில் மின்சாரம் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story