பாலக்கோடு அருகே தனியார் பால் நிறுவனத்தை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்


பாலக்கோடு அருகே தனியார் பால் நிறுவனத்தை கண்டித்து  இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2021 12:39 AM IST (Updated: 27 Oct 2021 12:39 AM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே தனியார் பால் நிறுவனத்தை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு:
பாலக்கோடு அருகே தனியார் பால் நிறுவனத்தை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் தொழிற்சங்கம் ஆரம்பித்து, ஊதிய உயர்வு, மற்றும் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் நிர்வாகம், தொழிற்சங்க நிர்வாகிகளை வெளிமாநிலங்களுக்கு பணி மாறுதல் செய்து வருகின்றது. இந்த பணி மாறுதலை ரத்து செய்ய கோரி ஊழியர்கள்  பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பாலக்கோடு-ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் வெள்ளிசந்தை 4 ரோடு பகுதியில் ஊழியர்களுக்கு ஆதரவாக இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.) சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுகதேவ், முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்தில் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள தொழிற்சங்க உரிமையை மறுக்கும் ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலையில் ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தொழிற்சங்கம் தொடங்கியதால் வெளி மாநிலங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்ட 100 தொழிலாளர்களின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
 பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 5 தொழிலாளர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும். கேண்டீன் உணவு ரூ.6 லிருந்து 36 ரூபாயாக விலை உயர்த்தியதை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் கார்த்திக்குமார் நன்றி கூறினார்.

Next Story