சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ெரயில்கள்
தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ெரயில்களை இயக்க வேண்டும் என தென்னக ெரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ெரயில்களை இயக்க வேண்டும் என தென்னக ெரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரெயில் பயணம்
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு தற்போதைய நிலையில் சாலை மார்க்கமாக வருவதற்கு அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆதலால் பெரும்பாலான மக்கள் ரெயில் பயணத்தையே விரும்பும் நிலை உள்ளது. மேலும் நடுத்தர வர்க்கத்தினர் தீபாவளிக்கு முன் தினம் தான் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட வேண்டிய நிலை ஏற்படும். எனவே ெரயில் பயணத்தை மேற்கொள்ள முன் பதிவு செய்ய முடியாத நிலையில் சிரமப்படும் நிலை ஏற்படும்.
வலியுறுத்தல்
எனவே இவர்களுக்கு ெரயில்வே நிர்வாகம் சிறப்பு ெரயில்களை இயக்க வேண்டியது அத்தியாவசிய தேவையாகும். எனவே தென்னக ெரயில்வே நிர்வாகம் தீபாவளியையொட்டி நவம்பர் 3 மற்றும் 4-ந் தேதிகளில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத பகல் நேர சிறப்பு ெரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் சென்னை திரும்புவதற்கு தீபாவளிக்கு அடுத்த இரு தினங்களில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ெரயில்களை இயக்க தென்னக ெரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இருந்து நாகர்கோவில் வரையிலும் சிறப்பு ரயில்களை இயக்குவது போல் சென்னையில் இருந்து செங்கோட்டை வரையிலும் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story