வன்கொடுமை சட்டத்தில் முதியவர் கைது


வன்கொடுமை சட்டத்தில் முதியவர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2021 12:48 AM IST (Updated: 27 Oct 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

கல்லிடைக்குறிச்சி அருகே வன்கொடுமை சட்டத்தில் முதியவரை போலீசார் கைது செய்தனர்.

அம்பை:
கல்லிடைக்குறிச்சி நகரப்பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்ப்பவர் சின்னதம்பி. இவரை அகஸ்தியர் கோவில் கீழத்தெருவை சேர்ந்த துரைராஜ் (வயது 67) என்பவர் சாதியை சொல்லி திட்டியதாக சின்னத்தம்பி, கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து துரைராஜை கைது செய்தனர். அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story