விபத்தில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலைய டிரைவர் பலி


விபத்தில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலைய டிரைவர் பலி
x
தினத்தந்தி 27 Oct 2021 12:50 AM IST (Updated: 27 Oct 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

பஸ், மோட்டார்சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் எலுமிச்சை ஆராய்ச்சி நிலைய டிரைவர் பலியானார்.

நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 46). இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள எலுமிச்சை ஆராய்ச்சி நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு பாளையங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோடு பிரியும் பகுதியில் வந்த போது அந்த வழியாக தனியார் பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள், பஸ் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட நல்லமுத்து படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த போலீசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேேய நல்லமுத்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ேபாக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story