தினத்தந்தி புகார் பெட்டி


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 27 Oct 2021 1:02 AM IST (Updated: 27 Oct 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பழுதடைந்த உடற்பயிற்சி கருவி 
திருச்சி  கீழப்பொலி லூர்துசாமி பிள்ளை பூங்காவில்  உடற்பயிற்சி செய்யும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு  கருவியின் அடிப்பாகம் தரையில் பிடிமான மின்றி ஆடுகின்றது. இதை குழந்தைகள் பயன் படுத்தும்  போது கீழே சாய்ந்தால் காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே திருச்சி மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து இதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சுவாமிநாதன், கீழப்பொலி, திருச்சி. 

வடிகால் ஆக்கிரமிப்பு 
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கல கோட்டம் 22-வது வார்டு பாலக்கரை அன்னைநகர் 4-வது தெருவின் முன் பகுதியில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி வீடுகளில் புகுந்து விடுகிறது. அப்போது மழைநீருடன் விஷ ஜந்துக்களும் வீட்டுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராணி, அன்னைநகர், திருச்சி. 

சாலையில் செல்லும் கழிவுநீர் 
திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகர் 2-வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்து சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுத்தொல்லை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவவும் வாய்ப்பு உள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கருமண்டபம், திருச்சி. 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், லால்குடி ஆங்கரை பகுதியில் உள்ள வ.உ.சி.நகரில்  ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது பழுதடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி சேற்றில் விழுகின்றனர். மேலும் இப்பகுதியில் மழைநீர் வடிந்துசெல்லும் வகையில் வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், லால்குடி, திருச்சி.

மழையில் நனையும் நெல்மணிகள் 
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி, பி.மேட்டூர் மாரியம்மன் கோவில் அருகில் செயல்பட்டுவரும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கொண்டுசெல்ல லாரிகள் வரவில்லை. இதனால் நெல் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. தினமும் அவ்வப்போது  மழை  பெய்வதால்  நெல் மணிகள் மழையில் நனைந்து வீணாகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயிகளை பாதுக்காத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
ரமேஷ், பி.மேட்டூர், திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாநகராட்சி 22-வது வார்டில் சாலையோரத்தில் கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனை கால்நடைகள் உண்பதினால் கால்நடைகளின் உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருச்சி. 

மக்காச்சோள பயிரை நாசம் செய்யும் குரங்குகள் 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர்  வட்டம் , சாத்தனூர் கிராமத்தில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. மக்காச்சோளம் பூ மற்றும் கருது வரும் நிலையிலும் , கருது வந்த பிறகும் மக்காச்சோளப்பயிரை நூற்றுக்கணக்கான குரங்குகள் பட்டாளமாக வந்து ஓடித்து உண்டு பெருமளவில் நாசம் செய்கின்றன. இதனால் பெருமளவில் விவசாயத்தில் பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த சேதம் வருடா வருடம் தொடர்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குல்லாகிறது. எனவே இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
திலகர், சாத்தனூர், பெரம்பலூர்.

சாலையை ஆக்கிரமித்த கருவேல செடிகள் 
பெரம்பலூர் எரையசமுத்திரத்தில் இருந்து அய்யலூர் வரை செல்லும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல செடிகள் முளைத்துள்ளன. இதனால் சாலையின் ஓரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்லும்போது சாலையோரத்தில் நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பெரம்பலூர். 

தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர் 
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், செந்துறை முதல்நிலை ஊராட்சி மன்றம் பெரியார்நகர், பிள்ளையார் கோவில் தெரு மில் எதிர்புறம் கடந்த 3 ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சங்கர், செந்துறை, அரியலூர். 

குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம்,  உறையூர் மேலபாண்ட மங்கலம் 60-வது வார்டுக்கு உட்பட்ட  பாத்திமா நகர் பகுதி சாலைகள்  சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், உறையூர், திருச்சி. 
இதேபோல் திருச்சி மாவட்டம் துறையூர் நகமநாயக்கன்பட்டி முதல் சேனப்பநல்லூர் வரையும்,  காவேரிப்பட்டி முதல்  நா.கருப்பம்பட்டி வரை  செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சிவக்குமார், துறையூர், திருச்சி. 

திறக்கப்படாமல் உள்ள கழிப்பறை 
கரூர் மாவட்டம், குளித்தலை ரெயில்  நிலையத்தில் என்.எல்.சி. நிறுவனம் சார்பில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள கழிப்பறை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ரெயில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கழிப்பறையை திறக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
துரைராஜ், குளித்தலை, கரூர். 

வடிகால் வசதி இல்லாததால் தேங்கும் மழைநீர் 
கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, தோகைமலை அருகே உள்ள புதூர் கிராமத்தில் சரியான வடிகால் வசதி இல்லாததால் இப்பகுதியில் மழை பெய்யும்போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதினால் அவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புதூர், கரூர். 

பங்குனி வாய்க்கால்  தூர்வாரப்படுமா? 
திருச்சி மாவட்டம், அத்தானி மண்ணச்சநல்லூர் இடையே ஓடும் பங்குனி வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது. இதனால் வாய்க்கால் தூர்ந்துபோய் மழைநீர் செல்ல வழியின்றி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயப்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஞானசேகரன், மண்ணச்சநல்லூர், திருச்சி. 

இரவு நேர டாக்டர் இல்லாத அரசு மருத்துவமனை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 3 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் 3 பேரும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பணிபுரிந்து விட்டு சென்று விடுகின்றனர். மாலை மற்றும் இரவு நேரங்களில் டாக்டர்கள் இருப்பதில்லை. ஒரே ஒரு செவிலியர் மட்டுமே உள்ளார். இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்கு வருவோர் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு இரவு நேர டாக்டர் நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சேது மாதவன், ‌சுக்கிரன் விடுதி, புதுக்கோட்டை. 


Next Story