ரெயில் பெட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி, அக்.27-
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டியில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சுமைதூக்கும் தொழிலாளி
திருச்சி கண்டோன்மெண்ட் வார்னஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜபருல்லா (வயது 50). இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பார்சல் அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு வந்தவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் ரெயில் நிலைய 7-வது, 8-வது ரெயில்வே பிளாட்பாரத்தின் இடையே உள்ள யார்டில் பாலக்காடு செல்லும் பாசஞ்சர் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த ரெயிலில் உள்ள பெட்டிகளை துப்புரவு பணியாளர்கள் நேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தற்கொலை
அப்போது ஒரு ரெயில் பெட்டிக்குள் மின் விசிறியில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ஜபருல்லா பிணமாக கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின், சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4 நாட்களாக ஜபருல்லா வீட்டுக்குச் செல்லாமல் இருந்ததும், அதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், காலியான ரெயில் பெட்டிக்குள் சென்று தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Related Tags :
Next Story