சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 27 Oct 2021 1:08 AM IST (Updated: 27 Oct 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள நெப்புகையைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குமரேசன் (வயது 24). இவர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருந்த ஒரு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
 பின்னர் அந்த மாணவியை அருகில் உள்ள சவுக்கு தோப்புக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
ஆயுள் தண்டனை
அவர்கள் இதுகுறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி குமரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
 இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக குமரேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அங்கவி ஆஜரானார்.


Next Story