புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளை அடுத்த கோணுழாம்பள்ளம் பகுதியில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் குடியிருப்புகளுக்கு புகுந்து வீடுகளில் உள்ள உணவு பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து செல்கின்றன. அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சாலையில் குரங்குகள் கூட்டமாக அங்கும், இங்கும் ஓடிச்செல்கின்றன. இதனால் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோணுழாம்பாள்ளம் பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேலக்காவேரி பகுதியில் ஜாமியா நகர் உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைத்தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குப்பைத்தொட்டியை சுற்றி குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஜாமியா நகரில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், புதிய குப்பைத்தொட்டி வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-பொதுமக்கள், கும்பகோணம்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட சாரதா நகர் மற்றும் ஜெயலட்சுமி நகர் பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது தெருவிளக்குகள் பராமரிப்பின்றி சேதமடைந்து எரியாமல் உள்ளன. மேலும், தெருவிளக்கில் சிறிய அளவிலான பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் போதிய வெளிச்சம் கிடைப்பது இல்லை. இதனால் இரவு நேரங்களில் மேற்கண்ட தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பிரேம், தஞ்சாவூர்.
தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் ரெயில்வே கேட் சாலை பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இந்தக் குரங்குகள் கூட்டமாக சாலையில் அங்கும், இங்கும் ஓடித் திரிகின்றன. மேலும், சாலையில், வாகனங்களில் செல்பவர்களை துரத்திச் செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்லும் சூழல் ஏற்பட்டு விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சாலியமங்கலம் ரெயில்வே கேட் சாலை பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
- ரித்திகா, சாலியமங்கலம்.
குரங்குகள் அட்டகாசம்
-தாஜுதீன், திருவிடைமருதூர்.
சுகாதார சீர்கேடு

தெருவிளக்குகள் ஒளிருமா?
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட சாரதா நகர் மற்றும் ஜெயலட்சுமி நகர் பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது தெருவிளக்குகள் பராமரிப்பின்றி சேதமடைந்து எரியாமல் உள்ளன. மேலும், தெருவிளக்கில் சிறிய அளவிலான பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் போதிய வெளிச்சம் கிடைப்பது இல்லை. இதனால் இரவு நேரங்களில் மேற்கண்ட தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பிரேம், தஞ்சாவூர்.
குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை
தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் ரெயில்வே கேட் சாலை பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இந்தக் குரங்குகள் கூட்டமாக சாலையில் அங்கும், இங்கும் ஓடித் திரிகின்றன. மேலும், சாலையில், வாகனங்களில் செல்பவர்களை துரத்திச் செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்லும் சூழல் ஏற்பட்டு விபத்துக்களில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சாலியமங்கலம் ரெயில்வே கேட் சாலை பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
- ரித்திகா, சாலியமங்கலம்.
Related Tags :
Next Story