சென்னை தெற்கு ரெயில்வே ‘சாம்பியன்’


சென்னை தெற்கு ரெயில்வே ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 27 Oct 2021 1:19 AM IST (Updated: 27 Oct 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தெற்கு ரெயில்வே ‘சாம்பியன்’

திருச்சி, அக்.27-
ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் இந்திய ரெயில்வே பாதுகாப்பு படை அணிகளுக்கு இடையேயான ஆக்கி போட்டி கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடந்தது. இதில் தென்கிழக்கு மத்திய ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கிழக்கு ரெயில்வே, தெற்கு ரெயில்வே உள்ளிட்ட 8 ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) அணிகள் கலந்து கொண்டு விளையாடின. சென்னை தெற்கு ரெயில்வே அணியில் சென்னை-6, திருச்சி-7, மதுரை-2, சேலம்-1 என 16 ஆர்.பி.எப். வீரர்கள் ஆக்கி போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு ரெயில்வே பாதுகாப்பு படை அணிகளுடன் நடந்த ஆக்கி போட்டியில் சென்னை தெற்கு ரெயில்வே அணி 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. நேற்று முன் தினம் காலை அரை இறுதிக்கான ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி-தெற்கு கிழக்கு மத்திய ரெயில்வே அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வே (சென்னை) அணி வெற்றி பெற்றுஇறுதிப்போட்டிக்குமுன்னேறியது.அதைத்தொடர்ந்து மாலையில் இறுதிப்போட்டி நடந்தது. இதில் சென்னை தெற்கு ரெயில்வே-டெல்லி வடக்கு ரெயில்வே ஆர்.பி.எப். அணிகள் மோதியது. இரு அணி வீரர்களும் பந்தை நகர்த்தி சென்று அபாரமாக ஆடினாலும் கோல் எதுவும் போட முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி வீரர் வினோத் அடித்த பந்து கோலுக்குள் விழுந்தது. அதன்பின்னர் யாரும் கோல்போட முடியவில்லை. ஆக 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை தெற்கு ரெயில்வே அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் ஆக்கி போட்டியில் சென்னை தெற்கு ரெயில்வே பாதுகாப்பு படை அணி வெற்றி வாகை சூடியது. அந்த அணிக்கு சுழற்கோப்பையை, ஒடிசா ரெயில்வே பொதுமேலாளர் வழங்கி பாராட்டினார்.

Next Story