இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2021 7:52 PM GMT (Updated: 2021-10-27T01:22:28+05:30)

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகர் இந்து முன்னணியின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் கற்பகவடிவேல் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் புரட்சிகவிதாசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாவட்ட பொறுப்பாளர்கள் திருப்பதி, மோகன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில் நகைகளை உருக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்ப்பு தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல, கறம்பக்குடி ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில் சீனிக்கடை முக்கத்தில்  இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் காசிகர்ணன், பா.ஜ.க. ஒன்றிய தலைவர் அருஞ்சு வேராஜன், மாவட்ட துணைசெயலாளர் தமிழரசன், புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே இந்து முன்னணியினர் சார்பில் ராஜரெத்தினம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story