வீடு புகுந்து 5 பவுன் தங்க நகையை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


வீடு புகுந்து 5 பவுன் தங்க நகையை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
x
தினத்தந்தி 27 Oct 2021 1:25 AM IST (Updated: 27 Oct 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து 5 பவுன் தங்க நகையை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி, அக்.27-
வீடு புகுந்து 5 பவுன் தங்க நகையை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
நகை திருட்டு
திருச்சி திருவானைக்காவல் கந்தன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 51). இன்சூரன்ஸ் ஊழியரான இவர் வீட்டை பூட்டி விட்டு வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத வேளையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி விட்டுச் சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.
இது குறித்து ராமகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
லாட்டரி சீட்டுகள் விற்றவர்கள் கைது
*திருச்சி காந்தி மார்க்கெட், கண்டோன்மெண்ட், கோட்டை, ஸ்ரீங்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக பாலக்கரையை சேர்ந்த கோபிநாத் (39), கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த அருண் (25), கீழராணி தெருவைச் சேர்ந்த லோகநாதன் (62), எடத் தெருவைச் சேர்ந்த பீட்டர் சபரிநாதன் (33), பாலக்கரை கேம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்த சந்தோஷ் முருகவேல் (38), ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்த ரமேஷ் (54) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து 3 செல்போன்கள்மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
பெண்மாயம்
*ஸ்ரீரங்கம் பெரிய கருப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் இந்துமதி (21). இவர் திருச்சியில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று நகைக்கடையில் வேலை வேண்டாம் என்று கூறி சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story