ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
x
தினத்தந்தி 27 Oct 2021 1:36 AM IST (Updated: 27 Oct 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பரம்பரை சொத்தை பட்டா மாறுதல் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, அக்.27-
திருச்சியில் பரம்பரை சொத்தை பட்டா மாறுதல் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நிலவரி திட்ட சிறப்பு தாசில்தார்
திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது.  பூர்வீக நிலமான இதனை அளவீடு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் சீனிவாசன் மனு செய்து இருந்தார்.
ஆனால்  நகர நிலவரி திட்ட சிறப்பு தாசில்தார் கோகுல் (வயது 42) என்பவர் நில அளவீடு செய்து பட்டா மாறுதல் செய்து தராமல் சீனிவாசனை கடந்த 2 மாதமாக அலைக்கழித்து வந்துள்ளார்.
 லஞ்சம்
இது குறித்து சீனிவாசன் கேட்ட போது, பட்டா மாறுதல் செய்து தர ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தால் வேலை நடைபெறும் என்று கூறி உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். .
இதனையடுத்து  போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் சீனிவாசன்  நேற்று மாலைரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக சிறப்பு தாசில்தார் கோகுலிடம்  கொடுத்துள்ளார்.
தாசில்தார் கைது
அப்போது சிறப்பு தாசில்தார் கோகுல் அவரிடம் இருந்து பணம் பெறும் போது அங்கு மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.  இதனை தொடர்ந்து தாசில்தார் அலுவலகம் மற்றும் உறையூரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று இரவு விடிய விடிய நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து கோகுலை விசாரித்து வருகின்றனர்.

Next Story