கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தா.பழூர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் விஜய் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் பாண்டியராஜன் வரவேற்று பேசினார். பொறுப்பாளர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தார். திருச்சி கோட்ட செயலாளர் குணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் மனோகர் கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் அரியலூர் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் கோகுல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story