எறும்பீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

திருவெறும்பூர்,அக்.27-
திருவெறும்பூர் அருகே பிரசித்திபெற்ற எறும்பீஸ்வரர் மலைகோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் மாநகராட்சி சார்பில் சுற்றுச்சுவர் அமைத்து, மின்விளக்குகளும் பொருத்தப்பட்டு இருந்தன. மேலும் கோவிலின் வரலாறு பற்றிய வரைபடங்களும் வரையப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருவெறும்பூர் பகுதியில் அவ்வப்போது, மழை பெய்து வருகிறது. இதனால் தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் திடீரென்று தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்த தெப்பக்குளத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அப்போது, சுவற்றின் கீழ் கான்கிரீட் அமைக்கப்படவில்லை. இதனால் பலம் இன்றி இருந்த அந்த சுவர் தற்போது பெய்த மழையால் இடிந்து விழுந்துவிட்டது. இந்த வழியாக அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரத்தில் தெரியாமல் தெப்பக்குளத்துக்குள் விழ வாய்ப்புள்ளது. எனவே தெப்பக்குள சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story