வீட்டில் தனியாக இருந்த குழந்தைகளை ஏமாற்றி 5 பவுன் நகை திருட்டு


வீட்டில் தனியாக இருந்த குழந்தைகளை ஏமாற்றி 5 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 26 Oct 2021 8:26 PM GMT (Updated: 26 Oct 2021 8:26 PM GMT)

மதுரையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீடு புகுந்து நூதன முறையில் 5 பவுன் திருடிய பெண் உள்ளிட்ட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை
மதுரையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீடு புகுந்து நூதன முறையில் 5 பவுன் திருடிய பெண் உள்ளிட்ட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஜெராக்ஸ் கடை உரிமையாளர்
மதுரை அழகப்பன் நகர் பண்ட் ஆபீஸ் காலனி, ருக்மணி தெருவை சேர்ந்தவர் மணிராஜா(வயது 45). இவர் சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையம் எதிரே ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இவருக்கு  2 குழந்தைகள் உள்ளனர். மணிராஜா கடைக்கு தினமும் மனைவியுடன் சென்று வருவது வழக்கம். அப்போது வீட்டில் அவரது குழந்தைகள் மட்டும் தனியாக இருப்பார்கள்.
சம்பத்தன்று தம்பதியினர் கடைக்கு சென்ற பிறகு அவரது வீட்டிற்கு கணவன், மனைவி என்று கூறிக் கொண்டு 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் உனது தந்தை எங்களுக்கு தெரிந்தவர்கள் தான். நாங்கள் தவணை நோட்டில் கையெழுத்து போட வேண்டும். ஆதலால் பீரோவில் இருக்கும் நோட்டை எடுத்து கொடுக்குமாறு உனது தந்தை கூறியுள்ளார் என்று குழந்தையிடம் தெரிவித்துள்ளார். உடனே குழந்தை மணிராஜாவிற்கு போன் செய்து தவணை நோட்டு கேட்டு 2 பேர் வந்துள்ளதாக கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போனை அவர்களிடம் கொடுக்குமாறு தெரிவித்தார். போனை வாங்கியதும் அதனை ஆப் செய்து விட்டு, பீரோவில் இருந்து நோட்டில் கையெழுத்து போட்டு விட்டு செல்கிறேன் என்று அந்த நபர் பேசியுள்ளார்.
5 பவுன் நகை திருட்டு
தங்களது தந்தையிடம் அவர்கள் பேசிவிட்டதால் குழந்தைகள் பீரோவை திறந்து போது அங்கிருந்த 5 பவுன் நகையை திருடி கொண்டார். மேலும் அந்த பீரோவில் நோட்டு இல்லை, மற்றொரு பீரோவை திறக்குமாறு அந்த நபர் கூறியுள்ளார். உடனே குழந்தை மறுபடியும் தந்தைக்கு போன் செய்து மற்றொரு பீரோவை திறப்பது குறித்து கூறியுள்ளார். உடனே மணிராஜா நான் உடனே வீட்டிற்கு வருகிறேன் என்று கூறி விட்டு மனைவியுடன் வந்துள்ளார்.
அந்த நேரத்தில் கணவன், மனைவி என்று கூறி கொண்டு வீட்டிற்கு வந்தவர்கள் 5 பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அதன்பின்னர் வீட்டிற்கு வந்த மணிராஜா அவர்களை தேடிய போது கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அவர் இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவி என்று கூறி கொண்டு வீட்டிற்கு வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் நூதன முறையில் நகையை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story