கோவில் நகைகளை உருக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்


கோவில் நகைகளை உருக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2021 8:33 PM GMT (Updated: 26 Oct 2021 8:33 PM GMT)

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மதுரை, அலங்காநல்லூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அலங்காநல்லூர்
கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மதுரை, அலங்காநல்லூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் குருஜி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்னையா, செயற்குழு உறுப்பினர் வேல்முருகன்.நகர் தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் செந்தில் மூர்த்தி ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்ய உள்ளதாக அறிவித்த தமிழக அரசின் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்பேசினர்.
திருமங்கலம்
கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நகைகளை உருக்கும் திட்டத்தை கண்டித்து மீனாட்சி சொக்கநாதர் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story