சிவமொக்காவில் 71 ஆடுகள் மர்மசாவு
சிவமொக்காவில் மேய்ச்சலுக்கு கொண்டுவந்த 71 ஆடுகள் மர்மமான முறையில் செத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவமொக்கா:
மேய்ச்சலுக்கு...
பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். அவர்கள், பல கிராமங்களுக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார்கள்.
அதன்படி கடந்த 23-ந் தேதியில் இருந்து சிக்கோடியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் சுமார் 600 ஆடுகளை சிவமொக்கா டவுன் காடிகொப்பா ஸ்ரீராமபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கி மேய்த்து வந்தனர்.
71 ஆடுகள் செத்தது
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் 71 ஆடுகள் வயிறு வீங்கிய நிலையில் மர்மமாக செத்து கிடந்தது. இதைபார்த்து ஆடு மேய்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கால்நடை டாக்டர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் கால்நடை டாக்டர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் செத்துபோன ஆடுகளுக்கு உடற்கூறு பரிசோதனை நடத்தி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
71 ஆடுகளும் விஷ இலைதழையை தின்று செத்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உடனடியாக தெரியவில்லை. உடற்கூறு பரிசோதனை அறிக்கை முடிவுகள் வந்த பின்பே ஆடுகள் செத்ததற்கான காரணம் தெரியவரும். இதனால் செத்த ஆடுகளின் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி கண்ணீரில் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story