உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை
கம்பத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
கம்பம்:
கம்பம் பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணிமாறன், ஜனகர் ஜோதிநாதன், சுரேஷ்கண்ணன், மதன்குமார் ஆகியோர் நேற்று சோதனை செய்தனர்.
அப்போது அங்குள்ள குளிர்பதன பெட்டிகளில் சோதனை செய்தபோது அதற்குள் கெட்டுப்போன இறைச்சி, உணவு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. அவற்றை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதேபோல் கம்பம் பகுதியில் உள்ள மளிகை கடைகளிலும் சோதனை நடந்தது. அப்போது ஆடு, மாடு தோல்களை பதப்படுத்துவதற்கு வைத்திருந்த உப்பு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் கூறுகையில், ஓட்டல்களில் பழைய இறைச்சி மற்றும் உணவு பொருட்களை குளிர்பதன பெட்டியில் வைத்து மறுநாள் பயன்படுத்தும்போது விஷமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே தரமான உணவுகளை விற்பனை செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story