தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளைமறுநாள் மூடப்படும் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளைமறுநாள் மூடப்படும் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 27 Oct 2021 7:17 PM IST (Updated: 27 Oct 2021 7:17 PM IST)
t-max-icont-min-icon

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளைமறுநாள் மூடப்படும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) அனைத்து அரசு மதுபான கடைகள், மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். 
அன்றைய தினம் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளதால், மதுவிற்பனை செய்யக்கூடாது. மதுவிற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story