இல்லம் தேடி கல்வி திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
இல்லம் தேடி கல்வி திட்ட செயலாக்க ஆலோசனை கூட்டம்
கோத்தகிரி
கோத்தகிரி அருகே உள்ள குண்டாடா அரசு நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட செயலாக்கம் குறித்த பள்ளி மேலாண்மை குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவி யாஜி அம்மு தலைமை வகித்தார்.
ஆங்கில பட்டதாரி ஆசிரியை மல்லிகா குமார் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய திட்டம் குறித்து அனைத்து உறுப்பினர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் தலைமை ஆசிரியர் விளக்கமளித்தார்.
பின்னர் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. தொடர்ந்து வருகிற 1-ந் தேதி முதல் பள்ளி திறப்பிற்கு தயார் நிலைக்கு அனைவரும் ஒத்துழைத்தல், இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தல், தன்னார்வலர்கள் சேர்த்தல், திட்டம் சார்ந்து குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. முடிவில் ஆசிரியை ராபியா பஷிர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story