காலாட்படை தின விழா


காலாட்படை தின விழா
x
தினத்தந்தி 27 Oct 2021 7:32 PM IST (Updated: 27 Oct 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் காலாட்படை தின விழா நடைபெற்றது.

குன்னூர்

எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் காலாட்படை தின விழா நடைபெற்றது.

காலாட்படை தின விழா

கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே ஜம்மு காஷ்மீரில் போர் நடைபெற்றது. அப்போது டெல்லியில் இருந்து சீக் ரெஜிமெண்ட் காலாட்படை சிரி நகரில் களமிறங்கி பழங்குடியின மக்களின் ஆதரவுடன் போராடி பாகிஸ்தான் படையை தோற்கடித்தது.

அதில் உயிரிழந்த காலாட்படை வீரர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் அந்த தினம், காலாட்படை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 75-வது காலாட்படை தின விழா, குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் நடைபெற்றது. 

நினைவு சின்னத்தில் மரியாதை

இதன் ஒரு பகுதியாக ராணுவ பயிற்சி கல்லூரிக்கு முன்பு உள்ள போர் நினைவு சின்னத்தில் ராணுவ கல்லூரி காலாட்படை தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் எம்.ஜே.எஸ்.காலன், ஓய்வு பெற்ற மூத்த ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு, எம்.ஆர்.சி. ராணுவ முகாம் கமாண்டெண்ட் பிரிகேடியர் ராஜேஸ்வர்சிங் உள்பட முப்படை அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக செயல்பட்ட ராணுவ ஆஸ்பத்திரி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசார் உள்பட 12 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story