சம்பளம் கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சம்பளம் கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2021 7:32 PM IST (Updated: 27 Oct 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

சம்பளம் கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூடலூர்

பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சியை சேர்ந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி கூடலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அனிபா தலைமை தாங்கினார். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் சி.கே.மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறும்போது, போதிய நிதி இல்லாததால் சம்பளம் வழங்க முடியவில்லை. அரசிடம் இருந்து நிதி வந்தவுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story