பூத்துக்குலுங்கும் காட்டு சூரிய காந்தி மலர்கள்


பூத்துக்குலுங்கும் காட்டு சூரிய காந்தி மலர்கள்
x
தினத்தந்தி 27 Oct 2021 7:32 PM IST (Updated: 27 Oct 2021 7:32 PM IST)
t-max-icont-min-icon

பூத்துக்குலுங்கும் காட்டு சூரிய காந்தி மலர்கள்

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு தாவர இனங்கள் வளர தேவையான காலநிலை நிலவுகிறது. இங்கு நிலச்சரிவை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் காட்டு சூரிய காந்தி விதைகள் தூவப்பட்டன. இவை மண்ணின் உறுதி தன்மையை அதிகரிப்பதுடன், நிலச்சரிவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூக்கும் தன்மை கொண்ட காட்டு சூரிய காந்தி மலர்கள், இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பூக்க தொடங்கி உள்ளன. 

குறிப்பாக மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையோரங்களில் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன. வாசமில்லாத மலராக இருந்தாலும் காண்போரின் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையில் மஞ்சள் வண்ணத்தில் வசீகரிக்கின்றன.

இதேபோன்று தமிழ்நாடு மாநில மலரான செங்காந்தள் மலர்களும் பூத்துக்குலுங்குகின்றன. அரவேனு முதல் குஞ்சப்பனை வரை சாலையோரத்தில் சிவப்பு நிறத்தில செங்காந்தள் மலர்களும், மஞ்சள் நிறத்தில் காட்டு சூரியகாந்தி மலர்களும் பூத்துக்குலுங்குவதை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்வதுடன், புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.


Next Story