இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Oct 2021 9:20 PM IST (Updated: 27 Oct 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கொடைக்கானல்: 

கொடைக்கானல் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் மேல்மலை பகுதிகளான பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கவுஞ்சி, வில்பட்டி, பள்ளங்கி, கீழ்மலை பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை கொடைக்கானல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தெரிவித்துள்ளார். 

நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் இன்று புதிய டிரான்ஸ்பார்மரை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடக்கிறது. இதனால் ராமராஜபுரம், மட்டப்பாறை, விளாம்பட்டி, குல்லலக்குண்டு, கல்லடிபட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்தார்.


Next Story