மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை


மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
x
தினத்தந்தி 27 Oct 2021 9:40 PM IST (Updated: 27 Oct 2021 9:40 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஓசூர்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட குழு கூட்டம் ஓசூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட குழு உறுப்பினர் செந்தில் தலைமை தாங்கினார். தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் நடத்த வேண்டும். இந்த தலைவர்கள் மக்களால் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க பட வேண்டும். இதை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள், தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். வருகிற 30-ந் தேதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சைக்கிள் பேரணி நடத்தப்படவுள்ளது என்றார்.  பேட்டியின் போது, மாவட்ட செயலாளர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் லகுமய்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story