மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்-நடிகர் கருணாஸ் பேட்டி


மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும்-நடிகர் கருணாஸ் பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2021 4:26 PM GMT (Updated: 2021-10-27T21:56:13+05:30)

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று நடிகர் கருணாஸ் கூறினார்.

சிவகங்கை,

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று நடிகர் கருணாஸ் கூறினார்.

இட ஒதுக்கீடு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர் குரு பூஜையையொட்டி முக்குலத்தோர் புலிப்படை நிறுவனரும், நடிகருமான கருணாஸ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக நீதியை காக்கக்கூடிய தி.மு.க. அரசின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சரும் 358 சமுதாயத்திற்கு சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதனை மேற்கொள்ள வேண்டும். தனிப்பட்ட ஒரு சமுதாயத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கியது மற்ற சமூதாயத்தை வஞ்சித்து நடந்து கொள்வதாகும்.

தேவர் பெயரை சூட்ட வேண்டும்

 ஒரு சமூகத்திற்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது. தெய்வத்திருமகனார் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைப்போம் என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அந்த உறுதி மொழியை தமிழ் சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும்.மேலும் சீர்மரபினருக்கு ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும்.   இவ்வாறு அவர் கூறினார்.

Next Story