சடையாண்டி கோவில் திருவிழா


சடையாண்டி கோவில் திருவிழா
x
தினத்தந்தி 27 Oct 2021 9:58 PM IST (Updated: 27 Oct 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே சடையாண்டி கோவில் திருவிழா நடந்தது.

பட்டிவீரன்பட்டி: 

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதியின் கரையோரத்தில் பழமையான சடையாண்டி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடந்தது. விழாவில் விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் காவல் தெய்வமான சடையாண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய ஆடுகளை வெட்டி சமையல் செய்தனர். 

பின்னர் பக்தர்களுக்கு கறிவிருந்து நடந்தது. இந்த விழாவில் அய்யம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story