428 மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல்; 3 பேர் கைது


428 மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2021 10:09 PM IST (Updated: 27 Oct 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் 428 மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் 428 மதுபாட்டில்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

ராமேசுவரம் பகுதியில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜ் தலைமையில் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி, குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நவநீதன் உள்ளிட்ட போலீசார் தனுஷ்கோடி செல்லும் சாலை எம்.ஆர்.டி.நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனை செய்ததில் அந்த காரில் 428 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. திருட்டுத்தனமாக விற்பனை செய்வதற்காக காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

3 பேர் கைது

இதையடுத்து 428 மதுபாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் வந்த ராமேசுவரம் மார்க்கெட் தெருவைச் சேர்ந்த ரியாஸ்கான்(35), வழிவிட்டான்(42), மோகன்ராஜ்(19) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.இந்த சம்பவம் குறித்து துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story