இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
உச்சிப்புளி பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ராமநாதபுரம்,
பெருங்குளம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் கீழநாகாச்சி மற்றும் பனைக்குளம் பீடர்களில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை செம்படையார் குளம், தாமரைக்குளம், உச்சிப்புளி, நாகாச்சி, புதுமடம், சேர்வைக்காரன் ஊரணி, பிரப்பன்வலசை, இருமேனி, நொச்சியூரணி, மானாங்குடி, ஆற்றங்கரை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, தேர்போகி, சித்தார்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ராமநாதபுரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் நிசாக் ராஜா தெரிவித்தார்.
Related Tags :
Next Story