பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடம் திறப்பது எப்போது கூடுதல் பாடப்பிரிவுகளை தொடங்க வலியுறுத்தல்
பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடம் திறப்பது எப்போது கூடுதல் பாடப்பிரிவுகளை தொடங்க வலியுறுத்தல்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி புதிய கட்டிடம் திறப்பது எப்போது என்றும், கூடுதல் பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி அரசு கல்லூரி
பொள்ளாச்சி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த 2017-ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. மேலும் சமத்தூர் ராம ஐய்யங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஒரு பகுதியில் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதே பள்ளி வளாகத்தில் கல்லூரிக்கு 4 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. அதில் ரூ.8 கோடியே 95 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய கட்டிடம் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
புதிய கட்டிடம்
இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூன் முதல் பாரதியார் பல் கலைக்கழக கல்லூரி, அரசு கல்லூரியாக மாற்றப்பட்டு பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கல்லூரிக்கு தரைதளம் உள்பட 3 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதில் 36 அறைகள் உள்ளன.
தற்போது கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் உள்பட 5 பாடப்பிரிவு களில் 895 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது புதிய கட்டிடத்தில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால் எப்போது திறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து கல்லூரி மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
திறக்க வேண்டும்
பள்ளி கட்டிடத்தில் போதிய வகுப்பறைகள் இல்லை. இடப் பற்றாக்குறை காரணமாக மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு படித்து வருகின்றோம். கட்டிட பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால், அந்த கட்டிடத்தை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும் தற்போது பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், பி.காம். சி.ஏ., பி.காம். பி.ஏ., பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகள் மட்டும் தான் உள்ளன. எனவே கூடுதலாக பாடப்பிரிவுகளை தொடங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story