புதைக்கப்பட்ட பெண்ணின் தலைப் பகுதியில் மர்மநபர்கள் தோண்டியது ஏன்?. பரபரப்பு தகவல்
ஜோலார்பேட்டை அருகே புதைக்கப்பட்ட பெண்ணின் தலைப்பகுதியில் மர்மநபர்கள் தோண்டியது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே புதைக்கப்பட்ட பெண்ணின் தலைப்பகுதியில் மர்மநபர்கள் தோண்டியது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
குழியை தோண்டினர்
ஜோலார்பேட்டையை அடுத்த பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). ரெயில்களில் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மாதம்மாள் (45) உடல்நிலை சரியில்லாமல் கடந்த 24-ந் தேதி இறந்துவிட்டார். அவருடைய உடலை 25-ந் தேதி பாரதிதாசன் நகரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
இரவில் மர்ம நபர்கள் மாதம்மாளின் தலையை துண்டித்து எடுத்து சென்றுவிட்டதாக கூறப்பட்டது. போலீசார் சென்று பார்த்தபோது மாதம்மாள் புதைக்கப்பட்ட இடத்தில் அவருடைய தலைப்பகுதியில் தோண்டி கழுத்தை அறுத்திருந்ததாக கூறப்பட்டது.
பரபரப்பு தகவல்
விசாரணையில் மாதம்மாள் உடலை அடக்கம் செய்யும் போது அவரது கால் விரலில் அணிந்திருந்த மெட்டியை மட்டுமே அகற்றினர். காதில் இருந்த கம்மலை பொதுமக்கள் கழற்ற சொல்லியும் அவரது மகன்கள் கழற்றவில்லை. அது கவரிங் என்பது அவரது குடும்பாத்தினருக்கு மட்டுமே தெரியும்.
இதனால் அந்த கம்மல் தங்கமாக இருக்கும் என்று நினைத்து அதை திருடுவதற்காக மர்ம நபர்கள் மாதம்மாள் தலைப்பகுதியை மட்டும் தோண்டியதாக தெரிய வந்துள்ளது.
Related Tags :
Next Story