பொள்ளாச்சி அருகே சிறுமி கர்ப்பம் பள்ளிக்கூட மாணவர் போக்சோவில் கைது
பொள்ளாச்சி அருகே சிறுமி கர்ப்பம் பள்ளிக்கூட மாணவர் போக்சோவில் கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய பள்ளிக்கூட மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமி கர்ப்பம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் 15 வயது மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவனுடன் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையில் அந்த மாணவன் திருமண ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.
மாணவர் போக்சோவில் கைது
இந்த நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செய்தனர்.
Related Tags :
Next Story