மினிலாரி மோதி டோல்கேட் ஊழியர் சாவு


மினிலாரி மோதி டோல்கேட் ஊழியர் சாவு
x
தினத்தந்தி 27 Oct 2021 10:35 PM IST (Updated: 27 Oct 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

மினிலாரி மோதி டோல்கேட் ஊழியர் சாவு

ஜோலார்பேட்டை

திருப்பத்தூரை அடுத்த சி.கே.ஆசிரமம் பூரிகாமணிமிட்டா செவத்தான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜின் மகன் ரஞ்சித்குமார் (வயது 30). இவர், நெக்குந்தி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி வீனா என்ற மனைவி உள்ளார்.

ரஞ்சித்குமார் வழக்கம்போல் வீட்டில் இருந்து புறப்பட்டு சுங்கச்சாவடி வேலைக்காக தனது மோட்டார்சைக்கிளில் நாட்டறம்பள்ளி சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

கே.பந்தரபள்ளி கிராம மசூதி அருகில் சென்றபோது. அந்த வழியாக எதிரே வந்த ஒரு மினி லாரி திடீரென அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் ரஞ்சித்குமார் பலத்த படுகாயம் அடைந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story