மருதுபாண்டியர் குருபூஜை விழா


மருதுபாண்டியர் குருபூஜை விழா
x
தினத்தந்தி 27 Oct 2021 5:09 PM GMT (Updated: 2021-10-27T22:39:32+05:30)

காளையார்கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

சிவகங்கை,

காளையார்கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

குருபூஜை விழா

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 220-வது குருபூஜை விழா காளையார்கோவில் காளீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள நினைவிடத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் யாக பூஜையுடன் தொடங்கியது. இதில் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிகர் கலந்து கொண்டார்.
இதையொட்டி 385 பேர் பால்குடம் சுமந்து அழகுகுத்தி ரதவீதிகள் வழியாக வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக வந்து மருதுபாண்டியர்கள் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து மாமன்னர் மருதுபாண்டியர் நல அறக்கட்டளையை சேர்ந்தவர்களும், காளையார்கோவில் மக்கள் சமுதாய, அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள், என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தி.மு.க.-அ.தி.மு.க.

தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உள்ளிட்ட தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்செயலாளர் கருணாகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் இளங்கோவன், சிவகங்கை நகர் கழகச் செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜா, சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், இளையான்குடி வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான கோபி, ஒன்றிய கழக செயலாளர்கள் .பழனிச்சாமி, சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி,ஜெகதீஸ்வரன், ஜெயப்பிரகாஷ், சிவசிவ ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர்ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர்.செந்தில்முருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், மகளிர் அணி மாவட்ட தலைவி ஏலம்மாள், வட்டார தலைவர் மதியழகன் மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் காளையார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கஸ்தூரி, குருநாதன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பா.ஜனதாவினர் அஞ்சலி

காளையார்கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியர் குருபூஜையில் பா.ஜனதா கட்சி சார்பில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவரும் மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன், மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்டத்தலைவர் மேப்பல் சக்தி, மாநிலச்செயலாளர் சண்முகராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் மார்த்தாண்டன், பாலமுருகன், செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் பில்லம்மை, சுகனேஸ்வரி, மாவட்ட செயலாளர் பழனிஸ்வரி, காளையார்கோவில் வடக்கு ஒன்றிய தலைவர் பில்லப்பன், தெற்கு ஒன்றிய தலைவர் மயில்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் நாகேஸ்வரன், மாவட்ட பிரசார அணி பொறுப்பாளர் அங்குசாமி, மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற செயலாளர் கந்தசாமி, விவசாய அணி மாவட்ட துணைத்தலைவர் சசிகுமார், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் ரவி, மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் பெமினா நாகராஜன், மாவட்ட ஓ.பி.சி. அணி துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவி மணிமேகலை, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் நாகலிங்கம், காளையார்கோவில் வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பழனிகுமார், ஒன்றிய செயலாளர் குமரேசன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் கட்சியினர்

மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுவனத்தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், மாவட்ட தலைவர் நாகலிங்கம், மாநில பொது செயலாளர் செல்வராஜ், மகளிர் பிரிவு செயலாளர் சுந்தரவள்ளி, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநில தலைமை நிலைய செயலாளர் கே.கே.உமாதேவன், மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, தே.மு.தி.க. சார்பில் மாவட்ட தலைவர் திருவேங்கடம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள். முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ், தமிழக தலைமை அகமுடையார் சங்க நிறுவனர் தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார், மாநில துணைத்தலைவர் நாராயணமூர்த்தி, பொருளாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி தாேமாதரமுத்து உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

இதையொட்டி போலீஸ்சூப்பிரண்டுகள் செந்தில்குமார், ராஜராஜன் ஆகியோர் தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 16 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி சிவகங்கை, காளையார் கோவில், திருப்பத்தூர், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.

Next Story